ஜனாதிபதியும் பிரதமரும் பொறுமையாக இருக்கின்றனர் – திஸாநாயக்க

0
29

இளைஞர்களின் போராட்டம் சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எஸ்.பி.திஸாநாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சராக ஒரு மாத காலம் மாத்திரமே பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில், இளைஞர்களின் போராட்டம் சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ள திஸாநாயக்க, 

இளைஞர்கள் வீதியில் இறங்கி இருப்பது தொடர்பாக அரசாங்கம் புரிந்துக்கொண்டுள்ளது. இளம் போராட்டகாரர்கள் கூறும் நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் மிக விரைவில் தீர்க்கப்படும் என்பதற்கான உறுதிப்பாட்டை வழங்குகிறேன்.

நாட்டை புதிய பயணத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான பின்னணியை அரசாங்கம் உருவாக்க முயற்சித்து வருகிறது. இதனால் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் மிகவும் பொறுமையாக செயற்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் எஸ்.பி. திஸாநாயக்க, இளைஞர்களின் எழுச்சியை அடக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை கடந்த காலங்களில் பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.