கொழும்பு பங்கு சந்தை அடுத்த வாரம் தற்காலிகமாக மூடப்படுகிறது

0
38

ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் ஐந்து வணிக நாட்களுக்கு பங்குச் சந்தையை தற்காலிகமாக மூடுமாறு இலங்கை பங்குப்; பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

ஆணைக்குழுவின் இயக்குனர், துசார ஜயரத்ன, இது தொடர்பில் ஏப்ரல் 15ஆம் திகதி அன்று இயக்குனர் குழுவுக்கு அறிவித்தலை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை காரணம் காட்டியே பங்குச் சந்iயை தற்காலிகமாக மூடுமாறு அவர் உத்தரவிட்;டுள்ளார்.

பங்குதாரர்களும் தொடர்புடைய தரப்பினரும் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்த பின்னரே இந்த முடிவை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.