எந்தவொரு பதவியும் எனக்கு வேண்டாம்; கோட்டாபயவுக்கு சென்ற கடிதம் – பந்துல குணவர்தன

0
39

வரும் நாட்களில்   நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சில் தான் எந்தவொரு பதவியையும் ஏற்கப் போவதில்லை என முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காண இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் , அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைச்சரவையின் பொறுப்பை ஏற்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் குறுகிய காலத்திற்கு சுமார் 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்கலாமெனவும், நெருக்கடிக்கு தீர்வு கிடைத்தவுடன் மற்றுமொரு அமைச்சரவையை நியமிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சில் குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பல மாற்றங்களையும் பந்துல குணவர்தன தனது கடிதத்தில் பரிந்துரைத்துள்லதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.