கைவிசேஷம் கொடுக்க மறுத்த வெளிநாட்டவர் மீது தாக்குதல்!

0
41

மட்டுவிலில் வெளிநாட்டிலிருந்து வந்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் புத்தாண்டு தினத்தில் கைவிசேஷம் கொடுக்க மறுத்த நபர் மீதே இரும்புக்கம்பியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் சிலருக்கு கைவிசேடம் வழங்கியுள்ளார்.

இதைக் கேள்வியுற்று மதுபோதையில் சென்ற நபர் ஒருவர் தனக்கும் கைவிசேடம் தருமாறு கோரியுள்ளார்.

இதன்போது கைவிசேடம் வழங்கிக்கொண்டிருந்த நபர் நாளை காலை வருமாறு கோரியுள்ளார்.

இதன்போது மதுபோதையில் இருந்தவர் அவர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.