3 ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டது; பரபரப்பை ஏற்படுத்திய தொலைக்காட்சி அறிவிப்பு!

0
568

ரஷ்ய போர் கப்பல் எப்போது மூழ்கியதோ அப்போதே மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

கருங்கடலில் ரஷ்யாவின் முக்கிய போர்க்கப்பலான மாஸ்க்வாவில் (Moskva) வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதை அடுத்து, கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் , அதில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் , உக்ரைன் தனது நெப்டியூன் (Neptune) ஏவுகணை மூலம் மாஸ்கோவின் கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான Moskva-ஐ அழித்த பெருமைக்கு உரிமை கோரியது.

இது குறித்து , ரஷ்யாவின் முக்கிய ஊடகமான ரஷ்யா 1 தொலைக்காட்சி தெரிவிக்கையில், இப்போது நடப்பது உக்ரைனுக்கு எதிரான போர் இல்லை, நேட்டோ நாடுகளுக்கு எதிரானதாக மாறிவிட்டது, அப்படியெனில், இது நிச்சயம் மூன்றாம் உலகப்போர் தான் என கூறியுள்ளது.

தொகுப்பாளர் Olga Skabeyev கூறுகையில், “போர் தீவிரமடைந்திருப்பத்தை பாதுகாப்பாக மூன்றாம் உலகப் போர் என்று அழைக்கலாம், அது மட்டும் உறுதி” என்று கூறினார். இந்நிலையில் அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.