புதிய அமைச்சரவையில் இளையவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை

0
36

புதிய அமைச்சரவையில் இளையவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் அமைச்சரவையில் நான்கு சிரேஸ்ட அமைச்சர்கள் மட்டுமே அங்கம் வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நான்கு அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் 15 பேரைக் கொண்ட அமைச்சரவையின் ஏனைய 11 பேரும் தற்பொழுது இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.வீ. சானக்க, ஜனக்க வக்கும்புர, காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை வகித்த அமைச்சர்களைக் கொண்டமைந்த பேரவையொன்று உருவாக்கப்பட உள்ளது.

இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகித்த உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதனால் ஏற்படும் இராஜாங்க அமைச்சுப் பதவி வெற்றிடங்களுக்கும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.