நெருக்கடியில் கைகொடுக்கும் தொப்புள் கொடி உறவு!

0
37

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய நிதி உதவியானது நாட்டின் பொருளாதாரத்தை தற்பொழுது காத்து வருகின்றது.

அந்நிய செலாவணியின் பற்றாக்குறையால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியினை எதிர்கொண்டு இலங்கை அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு எரிசக்தி பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக புதுடில்லி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொழும்பிற்கு குறுகிய காலக்கடனாக வழங்கியுள்ளது. கடந்த 50 நாட்களில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த எரிபொருள், 200,000 மெற்றிக் தொன் ஆகும்.

அத்துடன் இந்திய பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால், 40,000 மெற்றிக் தொன் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்திய நிதிக் கடன் வசதியின் கீழ் இந்தியாவில் இருந்து அரிசி விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்க்காக 2 பில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தியாவிடமிருந்து உதவி கிடைக்காவிட்டால் நாடு இன்னும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கும்.

“நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு உதவுவோம் என்று நம்புகிறோம். மேலும் பரிமாற்றங்கள் மற்றும் கடன்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று இந்தியாவின் மூத்த அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.