கோட்டாபய அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை – ஏற்றுக்கொண்டார் நாமல்

0
315

கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, அரச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது எனக்கு புரிகிறது இருப்பினும், இப்போது கோபத்திற்கான நேரமல்ல, தீர்வுக்கான நேரம்.

அரச தலைவரும் அரசாங்கமும் நாட்டிற்கான திட்டங்கள் குறித்து வெளிப்படையாக குரல் கொடுத்திருக்க வேண்டும்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித்து விளக்கமளித்திருக்க வேண்டும்.

மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் உரிமை என்றாலும் அத்தகைய கோபம் பயனற்றது என்பதுடன், நெருக்கடியை உருவாக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.