விடுமுறையில் ஊருக்கு சென்றவர்களுக்கான தகவல்: இன்று முதல் விசேட திட்டம்

0
56

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்ப விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இன்றைய தினம் முதல் இந்த விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

சுமார் 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்னஹன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அளவில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புத்தாண்டுக்காக ஊர்களுக்கு சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட புகையிரத சேவையொன்று எதிர்வரும் 17ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.