அடிப்படை தேவைகளுடன் உருவாகியுள்ள மக்கள் போராட்டக்களம்! ஆறாவது நாளாக தொடரும் போராட்டம் !

0
586

கொழும்பு – காலி முகத்திடலில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு “கோட்டாகோகம” என பெயர்சூட்டி இன்றுடன் ஆறாவது நாளாக போராடி வருகின்றனர்.

மருத்துவமனை, தற்காலிக கூடாரங்கள் மற்றும் தற்காலிக கழிப்பறைகள் என தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் போராட்ட களத்தை உருவாக்கியிருந்தனர்.

தற்போது போராட்டக்காரர்கள் காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் ‘கொடகோகம வித்தியாலயம்’ என்ற பெயரில் புதிய கல்லூரியையும் உருவாக்கியுள்ளனர்.மேலும், ஒரு நாட்டில் புதிய தலைமுறையினரின் கல்வியறிவு மற்றும் அவர்களின் மேம்பட்ட அணுகுமுறைகளுக்கு அடிப்படையை வழங்கும் ‘நூலகம்’ நேற்று இந்த புதிய கிராமத்தில் திறக்கப்பட்டது.

இதேவேளை, GO HOME GOTA “கோ ஹோம் கோட்டா” என வண்ணமயமான விளக்குகளால் பெயர் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதும குறிப்பிடத்தக்கது.