யாழ். மாவட்டத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் கவனத்திட்கு !

0
43

யாழ். மாவட்டத்தில் உள்ள சதோச நிலையங்களில் இனிமேல் குடும்ப அட்டைக்கு மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திலுள்ள சதோச நிலையங்களில் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனேகமானவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.ஆகவே கனிசமானவர்களுக்கு நியாயமான விலையில் சதோச நிலையங்கள் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெறுவதற்காக குடும்ப அட்டை நடைமுறையை நடைமுறைப்படுத்துமாறு சதோச நிலையங்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்படள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.