ஜனாபதி கோட்டாபயவை ஏமாற்றிய நம்பிக்கைக்குரியவர்கள்! அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்த விடயம்

0
442

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிக நம்பிக்கை வைத்திருந்த சிலர் அவரை ஏமாற்றிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போதுள்ளதை விட மிகப் பெரிய வகிபாகம் ஒன்றை வகிக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

எனது மதிப்பீட்டின்படி பசில் ராஜபக்ச நிதி அமைச்சர் பதவியை எடுக்காமல் இருந்திருக்கலாம். பிரதமர் மகிந்தவே நிதியமைச்சராக இருந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பார் என்று பரவலாக பேசப்படுகின்றதே என கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ரணில் திறமையானவர். ஆனால் அவரது திட்டங்களின் அடிப்படை கோட்பாடுகள் தவறாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அவருக்கு சர்வதேச தொடர்புகள் உள்ளன. அவரினால் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல முடியும்.

உலக வங்கிக்கு செல்லமுடியும். பிரச்சினைகளை எதிர்வுகூறக்கூடிய திறமை உள்ளது. ஆனால் அதில் ஏதோவொரு குறை இருக்கிறது. அது அந்த குறை என்று என்னாலும் தேட முடியாமல் இருக்கிறது. அவரின் திறமையில் எமக்கு பிரச்சினை இல்லை. அவருக்கு திறமை இயலுமை ஆற்றல் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.