உங்கள் வருகையை நாங்கள் விரும்பவில்லை: ஜெர்மன் ஜனாதிபதிக்கு மறுப்பு தெரிவித்த உக்ரைன்!

0
593

ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவதாக ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் அதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர்

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போர் தாக்குதல், உக்ரைனின் தற்போதைய நிலை மற்றும் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் ஆகியவற்றை குறித்து கலந்து ஆலோசிப்பதற்காக உக்ரைனின் மேற்கு எல்லை ஐரோப்பிய நாடான போலந்திருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து ஜெர்மன் பத்திரிக்கையான Bild வெளியிட்ட அறிக்கையில், வரும் புதன்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஜனாதிபதிகளுடன் இணைந்து ஜெர்மன் ஜனாதிபதி ஸ்டெய்ன்மியர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவதாக கோரிக்கை விடுத்தது இருந்ததாக தெரிவித்திருந்தது.

ஆனால் முந்தைய காலத்தில் ஜெர்மன் ரஷ்யா இடையே பொருளாதார நெருக்கங்களுக்கு உதவி காரணங்களுக்காகவும், ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் ஜெர்மன் சமூக ஜனநாயகவாதியான ஸ்டெய்ன்மியர்ருக்கு இருக்கும் உறவு காரணமாகவும் அவரது கோரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது.

மேலும் இதுகுறித்து ஜெர்மன் பத்திரிக்கை Bild-க்கு உக்ரைன் ராஜதந்திரி ஒருவர் அளித்த பேட்டியில், ஜெர்மன் ஜனாதிபதி ஸ்டெய்ன்மியருக்கும் ரஷ்யாவிற்கும் இருக்கும் உறவு அனைவரும் அறிந்ததே அதனால் தற்போதைக்கு தலைநகர் கீவ்விற்கு ஜெர்மன் ஜனாதிபதி ஸ்டெய்ன்மியர் வருவதை உக்ரைன் விரும்பவில்லை. வேண்டுமென்றால் வரும்காலங்களில் இந்த நிலை மாறலாம் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தனது கோரிக்கையை உக்ரைன் நிராகரித்து இருப்பதை கடந்த செய்வாய்க்கிழமை ஜெர்மன் ஜனாதிபதி ஸ்டெய்ன்மியர் உறுதிப்படுத்தியுள்ளார்.