கனடாவில் சாக்லேட்டை காட்டி 12 வயது சிறுவனை கடத்தி சென்ற நபர்! அடுத்து நடத்த அதிர்ச்சி சம்பவம்

0
61

கனடாவில் 12 வயது சிறுவனை சாக்லேட்டை காட்டி கடத்தி சென்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வின்னிபெக்கில் கடந்த சனிக்கிழமை மாலை பேருந்து நிலையத்தில் 12 வயது சிறுவன் நின்றிருந்தான். அப்போது அவனை அணுகிய 44 வயதான நபர் ஒருவர் சாக்லேட்டை கொடுத்துள்ளார்.

ஆனால் அதை வாங்க சிறுவன் மறுத்த நிலையில் அவன் கையை பிடித்து இழுத்தபடி அருகே இருந்த தனது வீட்டிற்கு மர்ம நபர் அழைத்து சென்றார். அங்கு சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக மதுவை அந்த நபர் கொடுத்து பாலியல் ரீதியான தாக்குதலை நடத்தியுள்ளான்.

பின்னர் ஒரு கட்டத்தில் அவன் தூங்கிய போது சிறுவன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். இதனையடுத்து பொலிசார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவன் நலமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குற்றவாளியை பொலிசார் வன்கொடுமை, கடத்தல், மிரட்டல் விடுத்தால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.