பரபரப்பை ஏற்படுத்திய கோவில் பூசாரி கொலை வழக்கு! 6 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
54

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோவில் பூசாரி சின்னண்ணா கொலை வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த தளியில் ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் கோவிலை நிா்வகித்து வந்தநிலையில் 2015 ஆம் ஆண்டு பட்டியலின மக்களை கோயிலில் வழிபட பூசாரி சின்னண்ணா (40) அனுமதிக்காததற்காக எதிா்ப்பு கிளம்பியது.

இதையடுத்து அவரது உறவினா்களான மணி (40), சந்திரன் (51), ரவி என்னும் ஐடெக் ரவி (41) ஆகிய மூவரும் பூசாரியிடம் தகராறு செய்தனா். இதையடுத்து கடந்த 8.5.2015 இல் இருசக்கர வாகனத்தில் சென்ற பூசாரியை மூவரும் கத்தியால் குத்திக்கொலை செய்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்தனா். வழக்கு ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில் மணி என்பவா் உடல்நலக்குறைவால் உயிரிழந்த விட்டாா்.

இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளிகள் ரவி, சந்திரன் ஆகிய இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

அபராதம் கட்ட தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை எனவும்ம் உத்தரவிட்டார். அதை அடுத்து குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 2 பேரும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.