புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளின் உறவினர்களுக்கு விசேட சலுகை

0
46

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஆகக்கூடிய சிறைக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கு, இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய இன்று (12) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் இந்த விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.