2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பாப்பரசரை சந்திக்க பயணம்!

0
42

 2019, ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிலரை ஏப்ரல் 22 அன்று இத்தாலிக்கு விமானத்தில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், புனித அந்தோனி தேவாலயம் மற்றும் சியோன் தேவாலயம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களின் போது பாதிக்கப்பட்ட சிலரே இத்தாலிக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில்; பாதிக்கப்பட்டவர்கள் பிரார்த்தனை சேவைக்காக அழைத்துச்செல்லப்படுவதாக கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தின் பங்குத்தந்தை சகோ. மஞ்சுள பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இவர்கள் பாப்பரசர் பிரான்ஸிஸை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இது தொடர்பான தகவல்களை கர்தினால் மெல்கம் ரஞ்சித் அடுத்த வாரத்தில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.