கோட்டாபயவை விரட்ட பாத யாத்திரை!

0
41

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இன்று அறிவித்தார்.

அதன்படி 17 ஆம் திகதி காலை 9 மணிக்கு களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமாகும் பாதயாத்திரை, 19 ஆம் திகதி கொழும்பை வந்தடையும் எனவும் அவர் கூறினார்.

இது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான போராட்டம் என்பதால் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் இத்துடன் நின்றுவிடப்போவதில்லை, கோத்தா பதவி விலகும்வரை எமது அரசியல் நடவடிக்கையும் தொடரும் எனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.