இராணுவ தளபதியின் பதவி நீட்டிப்பு சட்டபூர்வமானது – பாதுகாப்பு அமைச்சசு விளக்கம்

0
55

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்னும் செல்லுபடியாகும் என்றும், அது 2021 டிசம்பர் 31, முதல் அமுலுக்கு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது.

சவேந்திர சில்வாவின் பதவி நீடிப்பு சட்டப்பூர்வமானது அல்ல என தெரிவித்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இச் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்றம் அவரது பதவி நீடிப்பு சட்டபூர்வமானது என்றும் பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்தது.

இலங்கை இராணுவத்தின் 23வது தளபதியாக கடந்த 2019 ஓகஸ்ட் 17 அன்று முன்னாள் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் அவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.