இப்படியும் ஒரு தாயா? !

0
51

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 9மாத குழந்தையை கொடூரமாக ஈவிரக்கமின்றி தாக்கும் கொடூர தாயின் பகீர் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது .

சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனது மடியில் படுத்திருந்த குழந்தையை கன்னத்தில் அறைந்து,கழுத்தை நெரித்ததோடு, குழந்தையை மெத்தையில் தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த காணொளியை அப் பெண்னின் உறவினர் ஒருவர் எடுத்துள்ள்லதாக கூறப்படும் அதேவேளை, அவர்களும் குழந்தையை அடிப்பதை தடுக்கவில்லை.

இக் குழந்தையின் தந்தை வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரில் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்கு பின் குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.