மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பற்ற செயற்பாடு: மகாநாயக்க தேரர்கள் வருத்தம்!

0
366

தற்போதுள்ள சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் மூன்று நாள் விவாதம் நடத்தி தெளிவான தீர்வுகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையிலும், மக்களின் அபிலாஷைகளை மீறி பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமைக்கு திருகோணமலை மகா சங்கத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கண்டி மல்வத்து மகா விகாரையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் திருகோணமலை மகா நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.