காணாமல் போன மகனை தேடிய மற்றும் ஒரு தந்தை உயிரிழப்பு!

0
66

இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன தனது மகனை 12 ஆண்டுகளுக்கு மேலாக தேடிவந்த தந்தையொருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினைச் சேர்ந்த முனியாண்டி கறுப்பையா என்பவர், கடந்தகால யுத்த நிலையில் தனது மகனான மோகனதாஸ் என்பவரை காணாமல் போன நிலையில் தேடி தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தந்தை நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் காணாமல் போன தமது பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோர்கள் பலர், பிள்ளைகளை தேடி அலைந்து கிடைக்காத நிலையில் ஏக்கத்துடன் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.