யாழில் இடம்பெறும் பகற்கொள்ளை; திண்டாட்டத்தில் மக்கள்!

0
753

யாழில் 10 கிலோ அரிசியின் விலை 2500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

1500 ரூபாவாக இருந்த குறித்த சாப்பாட்டு அரிசி தற்போது 2500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்ட அவர்கள் , வியாபாரிகள் மக்களின் நிலைகளை யோசித்து பார்ப்பதில்லை எனவும்   விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதனால், வறிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.