மக்களே முடிவு எடுக்கட்டும்!…. “உடனே தேர்தலை நடத்துங்க”…. முன்னாள் பிரதமர் இம்ரான்கான்….!!!!

0
47

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவரான ஷபாஷ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான்கான், “உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். நேர்மையான தேர்தல் மூலம் யார் பிரதமராக வேண்டும் ? என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.