அரச தலைவருடனான பேச்சுவார்த்தை ரத்து! சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு

0
44

அரச தலைவருடன் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போவதில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீனமாக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சு பதவி ஏற்றதையடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் சாந்த பண்டாரவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.