ரஷ்யாவின் போக்கை கோழைத்தனமாக கருதும் ஸெலென்ஸ்கி:பாரிய பேரழிவை எதிர்நோக்க தயாராகுமாறு பொதுமக்கள் எச்சரிக்கை!

0
632

உக்ரைனின் கிழக்கில் கிழக்கில் இன்னும் பாரிய நடவடிக்கைகளை நடத்த ரஸ்யா முயற்சிப்பதாகவும் அதனை எதிர்கொள்ள தயாராகுமாறும் உக்ரைன் ஜனாதிபதி தமது நாட்டு மக்களிடம் கோரியுள்ளார்.

படையெடுப்புப் படைகள் மீது சித்திரவதை மற்றும் கோழைத்தனமான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

அவர்கள் உக்ரைனுக்கு எதிராக இன்னும் அதிகமான ஏவுகணைகளையும், இன்னும் அதிகமான வான் குண்டுகளையும் பயன்படுத்த முடியும்

எனினும் உக்ரைன் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பதில் வழங்கும் என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

உக்ரைன் முழுவதும் நிகழ்ந்துள்ள இறப்புக்கள், உக்ரைன் படைகளின் சொந்த இராணுவத் தாக்குதல்களின் விளைவாகும் என்ற ரஸ்ய கூற்றுக்களை அவர் நிராகரித்தார்.

இது அனைத்தும் ரஸ்யாவின் கோழைத்தனத்தால் வந்த விளைவுகள் என்று அவர் தொடர்ந்தார்

கோழைத்தனம் வளரும்போது அது ஒரு பேரழிவாக மாறும். தவறுகளை ஒப்புக்கொள்ளவும், மன்னிப்பு கேட்கவும், யதார்த்தத்திற்கு ஏற்ப கற்றுக்கொள்ளவும் தைரியம் இல்லாதபோது, அவர்கள் அரக்கர்களாக மாறுகிறார்கள்.

உலகம் அதைப் புறக்கணிக்கும் போது, தாமே உலகம் என்று முடிவு செய்கிறார்கள். அவற்றிற்கு ஏற்ப உக்ரைன் இதையெல்லாம் நிறுத்தும் என்று ஸெலென்ஸ்கி சூளுரைத்தார்.