ரஷ்யாவிற்கு எதிராக யூடியூப் அதிரடி நடவடிக்கை!

0
557

ரஷ்ய நாடாளுமன்ற டி.வி. சேனல் முடக்கம் செய்து யூடியூப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில், உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகியவை ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், யூடியூப் நிறுவனம் ரஷ்யாவின் அரசு டி.வி. சேனல்கள் அனைத்தயைும் ஏற்கனவே முடக்கியுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய நாடாளுமன்ற கீழவையின் நிகழ்வுகளை ஒளிபரப்பும் டுமா என்கிற டி.வி. சேனலை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது.

தங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதற்காக டி.வி. சேனல் முடக்கப்பட்டதாக யூடியூப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.