கொட்டித்தீர்க்கும் மழையிலும் கொழும்பில் திரண்ட மக்கள் – உக்கிரமடையும் போராட்டம்! அதிரும் தென்னிலங்கை!

0
54

கொட்டும் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் மக்கள், அரச தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

காலி முகத்திடலில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் இன்றும் தொடர்ந்து 2வது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் அங்கிருந்து வெளியேறாத நிலையில் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அரச தலைவர் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.