சஜித்தை சந்தித்த வீரவங்ச அணியினர்

0
39

பிரதமர் மற்றும் அமைச்சரவையை நீக்கி விட்டு, புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என கூறும் விமல் வீரவங்ச தரப்பு உட்பட 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இடைக்கால அரசாங்கம் தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் அந்த பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டன, அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் வழங்கி பதில் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.