நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை! வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

0
562

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் (09 மற்றும் 10 ஆம் திகதி) தொடரும் என அத்திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்பதுடன், அபாயங்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, இன்று (09) மதியம் 12:12 மணிக்கு சிலாபம், மஹாகெலிய, வெலிவிட்ட (மாத்தளை மாவட்டம்), புல்லுமலை, கல்குடா மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.