மன்னாரில் அரசாங்க அதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இடர் கால நிவாரண உதவி திட்டம்

0
463

மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து இடர் கால நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கில் பல நூற்றுக்கணக்கான பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் முதல் கட்டமாக 1200 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இடர் கால நிவாரண உதவியாக சுமார் 3500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஆரம்ப நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல், மாவட்ட அனர்த்த மகாமைத்தவ பிரிவு அதிகாரி மற்றும் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே.யாட்சன் பிகிறாடோ மற்றும் குறித்த நிறுவனத்தின் பணியாளர்கள் இணைந்து அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

இதன் போது மன்னார், நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் முதல் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 100 குடும்பங்களுக்குக் குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery