ஆர்ப்பாட்டக்காரர்கள் எம்.பிகளின் வீடுகளுக்குள் புகுந்தால் அதிரடி நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை

0
35

கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் கலகத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பொலிஸ் பிரிவுகளும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தேவை ஏற்பட்டால் இராணுவத்தினரின் பாதுகாப்பும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குள் அல்லது பிரபுக்களின் வீடுகளுக்குள் நுழைய முயற்சித்தால், முழுமையான அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கான பிரச்சாரம் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.