11 நாட்களாக சிக்கித் தவித்த 37,500 மில்லியன் மெற்றிக் தொன் டீசல் ஏற்றிவந்த கப்பல் நேற்றைய தினம் விடுவிப்பு !

0
525

சிங்கப்பூரிலிருந்து 37,500 மில்லியன் மெற்றிக் தொன் டீசல் ஏற்றிவந்த கப்பல் அமெரிக்க டொலர் செலுத்தப்படாமையால் கடந்த 11 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் சிக்கித் தவித்த நிலையில் 52 மில்லியன் டொலர் செலுத்தி இன்று (ஜூலை 7) பிற்பகல் விடுவிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து கப்பலில் இருந்து டீசலை இறக்கும் பணி நாளை ( 08) தொடங்கும் என்றும், கூடிய விரைவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்கப்படும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.

கப்பல் மார்ச் 28 அன்று இலங்கை கடற்பரப்பை அடைந்தது, ஆனால் அதை விடுவிக்க கனிம கூட்டுத்தாபனத்திற்கு கடன் கடிதங்களை திறக்க தேவையான டொலர்கள் கடந்த 11 நாட்களாக கடலில் தவம் கிடந்தமை குறிப்பிடத்தக்கது.