மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதுடைய இளைஞன் பலி!

0
55

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் குருக்கள்மடம் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.

மட்டு.கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த போது தான் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரமிருந்த மின்சாரத் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.