இலங்கைக்கு உணவுக்காக நிதியுதவியை வழங்க அவுஸ்திரேலியா நடவடிக்கை!

0
408

இலங்கையில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது.உலக உணவு திட்டம் மற்றும் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரிஸ் ஜேன் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று நோய் காரணமாக உலக உணவு விநியோக வலையமைப்பு பாதிக்கப்பட்டதுடன் உணவு பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் உணவு விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் கஷ்ட பிரதேசங்களில் போஷாக்கை அதிகரிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியா இந்த நிதியுதவியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.