போரில் உக்ரைன் வெற்றி பெற்றது ; பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!

0
471

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீண்டுவரும் ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைன் நாடு வெற்றி பெற்றதாக ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் நிபுணர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய பகுப்பாய்வு மையத்தின் டிரான்ஸ் அட்லாண்டிக் பாதுகாப்பு திட்டத்தில் இருந்து மார்க் வோய்ஜர்,  ஸ்கை நியூஸிடம் இதை கூறியதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.  

இதன்போது,  உக்ரைன் ரஷ்யாவை தரையில், தந்திரோபாய ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் வென்று வருகின்றதாக கூறினார். துரதிர்ஷ்டவசமாக, புடின் சோவியத் அமைப்பை மீண்டும் உருவாக்குகிறார்.

இது ஒரு சர்வாதிகார அமைப்பு, இது அனைத்து கருத்து வேறுபாடுகளையும் தடை செய்கிறதாக தெரிவித்த அவர், அத்துடன் இலவச தகவல்களுக்கான அணுகலையும் தடுக்கிறதுதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

எனவே சர்வதேச அளவில் உக்ரைன் வெற்றி பெற்று வருகின்றமை தெளிவாகின்றதாக கூறியதுடன், கருங்கடலில் நேட்டோ ரோந்து செல்ல வேண்டும் என்றும் எச்சரித்துடன் அசோவ் கடலைப் போலவே கருங்கடலும் இப்போது ரஷ்ய ஏரியாக மாற்றப்படுகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருங்கடல் உண்மையில் பல நேட்டோ உறுப்பினர்களாலும் உதாரணமாக ருமேனியா, பல்கேரியா, துருக்கி நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எனவே இறுதியில் கருங்கடலில் நேட்டோ ரோந்து செய்ய வேண்டும் என தான் கூறுவேன் என்றும் அவர் கூறியதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.