உடனடியாக பதவி விலகவும் – கண்டியில் மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

0
54

அரச தலைவரை உடனடியாக பதவி விலகக் கோரி கண்டியில் பாடசாலை மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘எங்களின் கனவுகளை எமக்கு கொடுங்கள்’ உள்ளிட்ட வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் இன்று காலை தலதா வீதியில் திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம் என சிறுவர் அதிகார சபை அறிவித்திருந்த நிலையில், ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, 1989ஆம் ஆண்டு சில பாடசாலைகளில் அரச எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மாணவர்கள் தூண்டப்பட்ட போதிலும், அனைத்துப் பாடசாலைகளும் ஒழுங்கமைக்கப்பட்ட மாணவர் போராட்டத்தை முன்னெடுத்தது இலங்கையில் இதுவே முதல் தடவை என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Gallery
Gallery
Gallery