மன்னாரில் இன்று அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

0
283

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (7) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை எதிர் நோக்கி பட்டினிச்சாவை நோக்கி நகர்கின்றது.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், மற்றும் மின்சாரம் இன்றி பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்செயலைக் கண்டித்து தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “கோட்டாபயவே வெளியேறு”,”குடும்ப ஆட்சி வேண்டாம்”,”மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே கொடு” போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.