போர்க்குற்றங்களுக்கு ஆதாரம் இல்லாமல் செய்வதற்காக ரஷ்யா செய்துள்ள பயங்கர சூழ்ச்சி அம்பலம்

0
445

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கு ஆதாரம் இல்லாமல் செய்வதற்காக, அந்நாடு செய்துள்ள சூழ்ச்சி தெரியவந்துள்ளது.

அதாவது, உக்ரைனின் Bucha நகரில் ரஷ்யப் படைகள் பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது, வயது வித்தியாசமில்லாமல், தாய்மார்களையும் மகள்களையும் ஒரே இடத்தில் வைத்து அவர்கள் குடும்பத்தினர் கண் முன்னாலேயே வன்புணர்ந்தது, இறந்தவர்கள் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டி வைத்தது, மக்களைக் கூட்டம் கூட்டமாக சித்திரவதை செய்து கொன்று குழிகளில் வீசியது என, வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அராஜகச் செயல்களில் ஈடுபட்டன.

ஆகவே, ரஷ்யா தான் செய்த குற்றங்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என பல்வேறு நாடுகளும் குரல் எழுப்பி வருகின்றன.

ஆக, அந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள், நாளை விசாரணை ஆணையங்களுக்கு முன்னால் சாட்சியமளிக்க வேண்டி வரும்.

ஆகவே, அவர்கள் உயிருடன் இருந்தால் சாட்சியமளிக்க நேரிடும் என்பதால், அவர்களைக் கொல்ல ரஷ்யா முடிவு செய்துள்ளது.

அதாவது, Bucha நகரில் அராஜகச் செயல்களில் ஈடுபட்ட ரஷ்யப் படையினர் தற்போது ரஷ்யாவுக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களை மீண்டும் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளதாக, உக்ரைன் பாதுகாப்புத்துறையின் உளவுத்துறை இயக்குநகரகம் தெரிவித்துள்ளது.

அந்த ரஷ்யப் படையினரை Kharkiv போன்ற இடங்களுக்கு அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளதாம். அப்படி அவர்கள் அங்கு அனுப்பப்படும் நிலையில், அவர்கள் போரில் கொல்லப்பட்டு விடுவார்கள்.

அவர்கள் கொல்லப்பட்டுவிட்டால் போர்க்குற்றங்களுக்கான விசாரணை ஆணையம் முன் அவர்கள் நிற்க மாட்டார்கள்.

ஆக, இவ்வளவு அராஜக செயல்களில் அந்த படைவீரர்கள் ஈடுபட்ட நிலையில், அவர்கள் சாட்சியமளிக்கக் கூடாது, அவர்களால் ரஷ்யாவுக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக அவர்களை பலியிட ரஷ்யா முடிவு செய்துள்ளதிலிருந்து, குற்றங்களையும் செய்துவிட்டு அவற்றில் சிக்கிக்கொள்ளாமலும் இருக்க ரஷ்யா செய்துள்ள சூழ்ச்சி தெரியவந்துள்ளது.