பிரியாணியால் கோடிகளில் கொட்டும் பணம்! ஆச்சரியப்படுத்தும் 27 வயது இளம்பெண்

0
326

ரம்யா ரவி! 27 வயதே ஆன இந்த இளம்பெண் இன்று ரூ 10 கோடிகள் வருமானம் ஈட்டி பிரியாணி வர்த்தகத்தில் புதிய புரட்சியையே செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த 2020ல் எல்லா தொழில்களையும் போல ஹொட்டல் தொழிலும் பெரும் சரிவை சந்தித்தது. இந்த கடினமான காலக்கட்டத்தில் தான் உணவு வர்த்தகத்தில் நுழைந்தார் ரம்யா ரவி.

அதன்படி சரியான முறையில் திட்டமிட்டு 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் வெறும் 200 சதுரடி கொண்ட அறையில் கிளவுட் கிட்சன் செட்-டப்பில் RNR தொன்னை பிரியாணி என்ற பெயரில் பெங்களூரில் வர்த்தகத்தை தொடங்கினார்.

இந்தக் கிளவுட் கிட்சனுக்கு ஒரே ஒரு சமையல்காரர் மற்றும் 2 உதவியாளர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய ரம்யா உடன் அவரது சகோதரி ஸ்வேதா-வும் இணைந்தார்.

இந்த இரண்டு இளம்பெண்கள் துவங்கிய RNR தொன்னை பிரியாணி கிளவுட் கிட்சன் வர்த்தகம் இரண்டே ஆண்டுகளில் ரூ 10 கோடியை தொட்டுள்ளது தான் ஆச்சரியம்.

மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் பாரம்பரிய உணவான முருங்கைக்காய் சில்லி, மட்டன் சூப், சிக்கன் நெய் ரோஸ்ட், இளநீர் பாயாசம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டது.

இது அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹிட்டானது. ஸ்விக்கி உடன் RNR தொன்னை பிரியாணி ஒரு வருட ஒப்பந்தம் செய்த முதல் மாதத்தில் மட்டும் சுமார் 10000 ஆர்டர்கள் குவிந்துள்ளது.

தற்போது பெங்களூரில் சுமார் 14 கிளவுட் கிட்சன் கொண்டு வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளார் ரம்யா.

வெறும் 3 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த கிளவுட் கிட்சன் தற்போது 60 ஊழியர்கள் உடன் மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது.