ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேச்சுவார்த்தை தோல்வியில்

0
41

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் நேற்றிரவு நான்கு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது சுதந்திரக் கட்சி ஏன் நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்தது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை என சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவது என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.