விஜய்யின் பிரமாண்ட ஹிட் படத்தை தவறவிட்டு தற்போது பிடித்த ராஷ்மிகா

0
39

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா 

தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் பெருமையை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னட திரையுலகில் அறிமுகமாகி இன்று பாலிவுட் வரை பிரபலமாகியுள்ள ராஷ்மிகா மந்தனாவிற்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே காணப்படுகிறது.

அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படத்தில் ஒப்பந்தமாகி வரும் நடிகை ராஷ்மிகா, அடுத்து நடிகர் விஜய்யின் 66-வது படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.  

விஜய் படத்தையே நிராகரித்தாரா !

இந்நிலையில் இதற்கு முன்பே நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்துள்ளதாக சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது.

ஆம், நடிகை ராஷ்மிகா ஏற்கனவே விஜய் மாஸ்டர் படத்தை கால்ஷீட் காரணமாக நிராகரித்துள்ளாராம். ஆனால் தற்போது தளபதி 66 படத்தில் அவர் தான் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.