புகையிரத கடவைகளை பயன்படுத்த்துபவர்கள் மிக அவதானம் : ரயில்வே அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன

0
41

புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு புகையிரத திணைக்களம் வாகன சாரதிகளையும் பாதசாரிகளையும் எச்சரித்துள்ளதாக ரயில்வே அத்தியட்சகர் (போக்குவரத்து) ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மின்வெட்டு நேரங்களில் புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானம் தேவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனெனில் மின்வெட்டு நேரங்களில் புகையிரத கடவைகளில் சமிக்ஞைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் வெட்டு நேரங்களில் சமிக்ஞைகளுக்கு மின் கலங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடிவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே மக்கள் புகையிரத கடவைகளில் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.