மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகளுக்கு பொருத்தமான அமைச்சர் ஒருவரை நியமிக்குமாறு ஜனக ரத்நாயக்க ஆலோசனை!

0
322

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகளுக்கு பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினரை அமைச்சராக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

நாட்டின் மின்சாரம் மற்றும் பெற்றோலிய தொழில்துறை நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதே இதற்குக் காரணம் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான உடனடி முடிவுகளை நிறைவேற்ற ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

நிலவும் பொருளாதார நெருக்கடியால் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் தவிர்ந்த முழு அமைச்சரவையும் பதவி விலகியது.

எவ்வாறாயினும், முழு அமைச்சரவையும் நியமிக்கப்படும் வரை நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் பிற செயல்பாடுகளை சட்டபூர்வமாகவும் நிலையானதாகவும் பராமரிக்க நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி நேற்று காலை நியமித்தார்.

இதன்படி, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ{ம், நிதி அமைச்சராக அலி சப்ரியும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.