மக்களின் கருத்துக்கு இணங்க ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – கத்தோலிக்க தேவாலயங்கள் கோரிக்கை

0
274

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கத்தோலிக்க தேவாலயங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு அமைச்சரவை மாற்றம் ஓர் தீர்வு அல்ல எனவும், மக்களின் கருத்துக்கு இணங்க ஜனாதிபதி பதவி விலக வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி விலகுவதன் மூலம் மக்கள் புதிய ஓர் தலைவரை தெரிவு செய்து கொள்ள சந்தர்ப்பம் உருவாகும் என தெரிவித்துள்ளது.

அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த

நாட்டு மக்கள் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதாகவும், அமைச்சரவையை மாற்றுவதற்கு இதற்கு தீர்வாகாது எனவும் கத்தோலிக்க தேவாலயங்களின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய அமைச்சரவை ஜனாதிபதியின் தலையீட்டினால் செயற்பட்டு வரும் நிலையில் புதிய அமைச்சரவையை நியமித்தாலும் ஜனாதிபதியின் அதே தலையீடு இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.