இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு என்ன?

0
353

இலங்கையுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரான சர்வதேச நாணய நிதியம், நாட்டில் எழுந்துள்ள புதிய அரசியல் கொந்தளிப்பு காரணமாக மாற்று முடிவுகளை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் அரசியலமைப்பு நெருக்கடி, தேசிய சட்டமன்ற கலைப்பு மற்றும் முன்கூட்டியே தேர்தல்கள் அறிவிப்பு ஆகியவற்றின் மத்தியில், சர்வதேச நாணய நிதியம் நேற்று பாகிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் தமது ஆதரவைத் தொடரப்போவதாக அறிவித்தது

பாகிஸ்தானுக்கான தமது திட்டத்தை இடைநீக்கம் செய்யும் எண்ணம் இல்லை என்றும் நாணய நிதியம் குறிப்பிட்டிருந்தது.

இலங்கையை பொறுத்தவரையில் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு ஒப்பான நிலையே இங்கும் ஏற்பட்டுள்ளது.

அந்த நாட்டில் பிரதமர் இம்ரான் கானின் கட்சி தமது ஆட்சி பலத்தை இழந்துள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் பிரச்சினை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மக்களின் கொந்தளிப்பு காரணமாக அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு செயற்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியை அமைச்சரவையை மாற்றி தமது செயற்பாட்டை காட்டியபோதும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.

இதனையடுத்து நாடாளுமன்றில் 113 ஆசனங்களை கொண்டிருப்பவர்களுக்கு ஆட்சியை கையளிப்பதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தவிருந்த பசில் ராஜபக்ச பதவியை இழந்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை விட்டுச்சென்றுள்ளார்இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் பொருளாதாரத்துக்கான தமது நிலைப்பாடு தொடர்பில் அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.