நாட்டை விட்டு வெளியேறினார் நிஸ்ஸங்க சேனாதிபதி!

0
29

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மாலைதீவுக்கு சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது, விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் அனைத்து பாதுகாப்பு கமராக்கள் கொண்ட கமரா அமைப்பு செயலிழந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை 8.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் இருந்து புறப்பட்ட அவர் UL102 என்ற விமானத்தில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கமரா அமைப்பின் கோளாறு குறித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரும் விசாரணையை தொடங்கியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.