டுவிட்டரை தன்வசமாகிய உலகின் மிகப்பெரிய பணக்காரர்!

0
30

டுவிட்டரின் 9.2 சதவீத பங்குகளை ஸ்பேஸ் எகஸ் நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) வாங்கியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் முதல் நிலை பணக்காரராக இருக்கிறார்.

இதில் உலகம் முழுவதும் டெஸ்லா தயாரிப்பான மின்னணு காருக்கு பிரத்யேக வரவேற்பு உண்டு.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.

இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தில், 7.3 கோடி பங்குகள் இவர் வசமாகி உள்ளன.