கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்காவின் வீடு முற்றுகை!

0
30

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தலைதூக்கியுள்ள நிலையில், அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானாக்காவின் வீடும் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது அந்த பகுதியில் பொலிஸார் மற்றும் பாதுகாப்ப தடையினர் பெருமளவானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டகாரர்களை நுழையவிடாமல் தடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.