குர்னல் பாண்டியாவை பந்துவீச்சின் மூலம் க்ளீன் போல்ட் ஆக்கிய நடராஜன்.. வைரலாகும் வீடியோ

0
34

ஐபிஎல் போட்டியில் குர்னல் பாண்டியாவை யார்க்கர் பந்துவீச்சின் மூலம் க்ளீன் போல்ட் ஆக்கிய நடராஜனின் வீடியோ வெளியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற 12வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதிய நிலையில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளில் தனது அபார பந்துவீச்சின் மூலம் எதிரணி வீரர்களை மிரட்டினார் யார்க்கர் மன்னன் நடராஜன்.

4 ஓவர்கள் வீசிய அவர் 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அதிலும் குர்னல் பாண்டியா 6 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டிருந்த போது நடராஜன் அவருக்கு யார்க்கர் வீசினார்.

பந்தானது ஸ்டெம்பை தெறிக்கவிட்டதோடு நேராக பவுண்டரி லைனுக்கே சென்றுவிட்டது. இதையடுத்து குர்னல் நடையை கட்டினார். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.